தூத்துக்குடி: கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவன்ராஜ், கடந்த 2018ல் தனது நண்பர்களுடன் கோவில்பட்டி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையாபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் (தற்போது இன்ஸ்பெக்டர்), வழக்கறிஞர் சென்ற காரை மறித்து ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
பின் காரில் வந்தவர்கள் ‘ஹெல்மெட் அணியவில்லை’ எனக் கூறி ரூ. 2,000 அபராதம் பெற்றுள்ளார். மேலும் ரூ. 2,000 பெற்றுவிட்டு ரூ.100-க்கு ரசீது போட்டு கொடுத்திருக்கிறார். இதில், காரில் உள்ளவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, காரில் இருந்த முகமது யாஷீர் என்பவரை காவல் ஆய்வாளர் தாக்கியுள்ளார்.
இது குறித்து சிவன்ராஜ், மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார். நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், நேற்று (நவம்பர் 3) இவ்வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சிலைமணிக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல்..!