ETV Bharat / state

தமிழ்நாட்டை இரண்டாக பிரிந்து கொங்கு மாநிலம் உருவாக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத் - tuticorin

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை வைத்துள்ளார்.

Hindu People Party President Arjun Sampath
இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்
author img

By

Published : Mar 31, 2023, 12:53 PM IST

"தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும்": இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கோரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பெருமாள் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "தூத்துக்குடியில் வரும் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் சனாதன இந்து தர்ம மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிக்கு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. தற்போது சனாதன இந்து தர்ம மாநாடு இங்கு (தூத்துக்குடி) நடைபெறுவது என்பது ஒரு நல்ல நோக்கத்திற்காக, ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்து எதிராளிகள் இங்கே மாநாடு நடத்தக்கூடாது என்று சொல்லி வெவ்வேறு காரணங்களை கூறுகிறார்கள். இந்து மக்கள் கட்சியினுடைய மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு மட்டும் தடை விதித்திருப்பது ஒட்டு மொத்த இந்துக்களுக்கு இழைத்திருக்கின்ற அநீதி என்றார்.

இந்த மாநாட்டில் மிக முக்கியமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயம் தென் மாவட்டங்கள் கல்வி, தொழில், வேலை வாய்ப்பு ஆகியவை மேம்படுத்த வேண்டும். அதற்காகத் தமிழ்நாடு மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தனி மாநிலம் உருவானால் அரசாங்கத்தினுடைய கவனம் இருக்கும், முதலமைச்சர் எளிமையாகச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் மற்றும் நிர்வாகம் இதெல்லாம் ஒரு சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும். அதனால் தனி மாநில கோரிக்கை என்பது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையிலே இங்கு எழுப்பப்படுகிறது.

தூத்துக்குடியில் ஆறு வழிச்சாலை திட்டம், அதே போன்று விருதுநகரில் ஜவுளி பூங்கா, பிரைம் மினிஸ்டர் ஸ்ரீ என்ற பள்ளிகள் நாடு முழுக்க 9,000 பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்து கல்வித்தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு இலவசமாக அப்பள்ளிக்கூடத்தில் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள் என்றார். மேலும் இந்த திட்டம், தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு ஏற்கனவே நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டில் தரம் உயர்த்துவதற்காகக் குறிப்பாக தென் தமிழ் நாட்டை தரம் உயர்த்துவதற்காகப் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறார்.

அதைத் தொடர்ந்து துறைமுகத்திடம், மின் உற்பத்தி திட்டம், சாலைகள் அமைக்கும் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம், இது போன்று பல திட்டங்களை கொண்டு வந்தாலும் மோடி எதிர்ப்பு என்கின்ற ஒற்றைப் புள்ளியில் கிறிஸ்தவ மிஷனரிகள், கம்யூனிஸ்ட்டுகள், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து இந்த தென் மாவட்டங்கள் வளர்ச்சியை தடுத்து வருகிறார்கள்.

எனவே கல்வி, தொழில் வாய்ப்புகளில் பின் தங்கி இருக்கக்கூடிய தென் மாவட்டங்கள் ஒருங்கிணைத்துத் தனி மாநிலமாக உருவாக வேண்டும். அதோடு மட்டுமல்ல தென் மாவட்டத்தில் வெகு வேகமாக இந்து தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள். மேலும் இந்துக்கள் மதமாற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். 100 சட்டமன்றத் தொகுதி என்றால் ஒரு மாநிலம் உருவாகும். இப்போது பாண்டிச்சேரி ஒரு சிறிய மாநிலம், உத்திரபிரதேசத்தை பிரித்தால் உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. பீகார் பிரித்து ஜார்கண்ட் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கொங்கு மாநிலம் உருவானால் நாட்டில் இன்னும் நன்றாக வளர்ச்சி அடையும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 5 மாநகராட்சிகள்.. அமைச்சர் கே.என்.நேரு கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.