ETV Bharat / state

தூத்துக்குடியில் இரவு பகலாக பெய்து வரும் கன மழை! - தூத்துக்குடியில் பெய்துவரும் கன மழை

தூத்துக்குடி : மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் காலை வரை கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடியில் பெய்துவரும் கன மழை
author img

By

Published : Oct 21, 2019, 12:15 PM IST

தெற்கு ஆந்திராவையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

தூத்துக்குடியில் பெய்துவரும் கன மழை

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நேற்றிரவு 10.30 மணியிலிருந்து தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகின்றது.

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம், பாளை ரோடு, பழைய மாநகராட்சி அலுவலகம், இரயில்வே ஸ்டேஷன் ரோடு, மில்லர்புரம், ஆசிரியர் காலனி, 3ஆவது மைல், பிரையண்ட் நகர், விவிடி மெயின் ரோடு, மட்டக்கடை, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்துப் பாதிப்பு!

Intro:
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக கனமழை - தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
Body:
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

வட தமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலந்தலை, கீழநாழுமூலைகிணறு, தளவாய்புரம் ஆகிய பகுதிகள் இரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில், தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் இரவு 10.30 மணியிலிருந்து தொடர்ந்து கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம், பாளை ரோடு, பழைய மாநகராட்சி அலுவலகம், இரயில்வே ஸ்டேஷன் ரோடு, மில்லர்புரம், ஆசிரியர் காலனி, 3வது மைல், பிரையண்ட் நகர், விவிடி மெயின் ரோடு, மட்டக்கடை, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ள பெறுக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.