திருச்செந்தூர் தாலுகாவுக்குள்பட்ட உடன்குடியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் செல்வமுருகன் (44).
இவர் திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்று ஜுலை 14ஆம் தேதி முதல் பணியாற்றிவந்தார்.
இவருக்கு அருணா (42) என்ற மனைவி, கமலேஷ் (18), அகிலேஷ் வர்ஷன் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர் இன்று (அக்.1) காலை உடன்குடி கூலையன்குன்று பகுதியில் பனங்காட்டில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து குலசேகரப்பட்டினம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை உடற்கூறாய்வு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில்சென்று செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத் தகராறா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.