ETV Bharat / state

உயிருக்கு போராடிய பழ வியாபாரி.. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமை காவலர் - குவியும் பாராட்டுகள்! - vendor attempt to suicide near thoothukudi

Thoothukudi news: தூத்துக்குடி அருகே தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பழ வியாபாரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உயிருக்கு போராடிய பழ வியாபாரியை மீட்ட தலைமை காவலர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 2:01 PM IST

உயிருக்கு போராடிய பழ வியாபாரியை மீட்ட தலைமை காவலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள வடக்கு கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவர் பசுவந்தனை பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று மாலை தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதன் பின்னர், கொய்யாப்பழ வியாபாரி முருகன், பசுவந்தனை பஜார் பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடை முன்பு உயிருக்குப் போராடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பசுவந்தனை காவல் நிலைய தலைமை காவலர் சுடலைமணி என்பவர், உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கொய்யாப்பழ வியாபாரி முருகனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனை அடுத்து, உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த கொய்யாப்பழ வியாபாரியை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனிதநேயத்துடன் செயல்பட்ட பசுவந்தனை காவல் நிலைய தலைமை காவலர் சுடலைமணி என்பவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

அதன் பின்னர், அங்கு வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த மக்களுக்கு, யாருக்காவது அவசர உதவி தேவைப்பட்டால், வேடிக்கை பார்க்காமல் தயவு செய்து அந்த நபருக்கு உதவி செய்ய முன் வாருங்கள் என்று அறிவுரை கூறினார். மேலும், தற்கொலை செய்து கொள்ள முயன்ற கொய்யாப்பழ வியாபாரி, உடல் நிலை தேறிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தந்தையைக் கொன்ற 17 வயது மகன்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.