தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி ஊரக உள்ளாட்சித் துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (ஜூலை 14) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திர பிரபு, ”தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநராக பணிபுரிந்துவரும் உமாசங்கர் எனும் அலுவலர், சக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்ட பின்னரும், அவர்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சக பெண் ஊழியருக்கு பணியில் பாதுகாப்பும், பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலர் மீது மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க:சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது!