தூத்துக்குடி: காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பனைத் தொழிலாளர்கள் கருத்தரங்க கூட்டம் தூத்துக்குடி தருவை குளம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கினைப்பாளர் அசோகன் தலைமையில், பொருளாளர் தேவ திரவியம் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பனைத்தொழிலாளர் வாரிய உறுப்பினர் எடிசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர், ’கள்’ இறக்க அனுமதி தர வேண்டும்; ரேஷன் கடைகளில் மக்களுக்கு உடனடியாக சீனிக்கு பதில் கருப்பட்டி அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பனை வாரிய உறுப்பினர் எடிசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, விரிவுப்படுத்த தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறார். நீண்ட நாள் கோரிக்கையான, அனைத்து ரேஷன் கடைகளிலும், சீனிக்குப் பதில் கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் ஆணைப் பிறப்பித்துள்ளார்.
தமிழக பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா முழுவதும் கள் (தனி பதனி)யை அமுதம் என்று இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். ஆகவே, தமிழகத்தில் கள் இறக்கவும் ஆவணம் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'அதிமுக - பாஜக உறவு என்பது எலிக்கும் தவளைக்கும் உள்ள உறவு' - அமைச்சர் விமர்சனம்