ETV Bharat / state

ஸ்ரீவைகுண்டம் அருகே கார் - சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு! - தூத்துகுடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே கார் - சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Girl killed in car-van collision near Srivaikuntam

author img

By

Published : Dec 1, 2020, 8:45 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் காரும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது 2 வயது மகள் தாமிரபரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரில் வந்த ஆதிநாதன்(58), சீதைஜானகி(50), வெங்கடேஷ்(30), ஶ்ரீவரமங்கை(28) ஆகியோர் படுகாயமடைந்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை - திருச்செந்தூர் சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:புல்லட் ரயிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.