ETV Bharat / state

‘தேர்தலில் யார் பணம் கொடுத்தது என்று கனிமொழிக்கு தெரியும்’ - கடம்பூர் ராஜூ - செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

minister kadampur raju
author img

By

Published : Oct 2, 2019, 8:10 PM IST

காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கடம்பூர் ராஜு, அதிமுகவினர் பணத்தை நம்பியே இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கனிமொழி கூறிய கருத்துக்கு பதில் அளித்தார். இதில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது தூத்துக்குடி மக்களுக்கு நன்றாக தெரியும். பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை என கனிமொழி சொல்லத் தயாரா? வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்தான் கனிமொழி. மற்றவர்களைப் பற்றி இவர் கூறுவது பொருத்தமாக இருக்காது’ என்று விமர்சித்து பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், அத்திக்கடவு அவினாசி திட்டம் காலம் காலமாக கனவு திட்டமாக இருந்தது. இப்படி திட்டங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வருவதைப் பார்த்து காழ்ப்புணர்ச்சியால் உண்மைக்கு மாறான தகவல்களை திமுகவினர் கூறி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

Intro:தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும், இதை மறுக்க கனிமொழி தயாரா? - அதிமுகவினர் பணத்தை நம்பியே இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கனிமொழி எம்பி கூறியதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடிBody:தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில்
மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாளையொட்டி
புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

கருணாநிதி ஆட்சியில் வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் தமிழகத்திற்கு தேடி வந்தது
ஆனால் இப்போது அப்படி இல்லை கனிமொழி கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு

நாடு சுதந்திரம் பெற்ற பின்பு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இதைத் தொடர்ந்து, 2015 இல் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பெருமை சேர்த்தார். அதேபோல கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி காட்டியதாக குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து 5750 கோடி ரூபாய்க்கு 30 ஆயிரம் இளைஞர்களுக்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு புரிகின்ற நல்ல ஏற்பாட்டினை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திமுக ஆட்சி காலத்தில் தொழில் முதலீட்டுக்கள் எப்படி வந்தது என்பது நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதிமுகவினர் பணத்தை நம்பியே இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக கனிமொழி எம்பி கூறியிருப்பது கேட்டதற்கு, நாடாளுமன்ற தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது தூத்துக்குடி மக்களுக்கு நன்கு தெரியும். பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை என கனிமொழி செல்லத் தயாரா என கேள்வி எழுப்பினார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்தான் கனிமொழி. மற்றவர்களை பற்றி இவர் கூறுவது பொருத்தமாக இருக்காது.

கொடுமுடியாறு, நம்பியாறு, தாமிரபரணி யாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டங்களை முதலமைச்சர் தான் இந்திய நாட்டிற்கு வழிகாட்டியாக இந்திய நாட்டிலே மத்திய அரசின் மூலமாக நதிகள் இணைப்பு நடைபெற வேண்டுமென கொள்கை அளவில் கூறியிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டிய பெருமை தமிழக முதலமைச்சரை சாரும்.
இன்றைக்கு 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆறுகள் எல்லாம் மூன்றாம் கட்டமாக நிதி கொடுத்து அந்தப் பணிகள் எல்லாம் நிறைவேறும் நிலையில் உள்ளது.
தற்போது நான்காம் கட்ட பணிகள் நிறை பெறுகின்ற நேர்த்திலே திருநெல்வேலி மாவட்டம் மட்டுமில்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் போன்ற பகுதிகள் இதன் மூலம் பயன் பெறுகின்ற திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது.

இது போன்ற திட்டங்கள் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி கூறமுடியுமா என கேள்வி எழுப்பினார். அத்திக்கடவு அவினாசி திட்டம் காலம் காலமாக கனவு திட்டமாக இருந்தது இப்படி திட்டங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வருவதைப் பார்த்து இன்றைக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக வேறு வழியில்லாமல் இப்படித்தான் உண்மைக்கு மாறான தகவல்களை அவர்கள் சொல்லி வருகின்றனர். நாங்குநேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றார்.

பேட்டி - கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.