ETV Bharat / state

நின்ற லாரி மீது கார் மோதி விபத்து - நான்கு பேர் உயிரிழப்பு! - Four killed as car collides head-on with truck

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

Four killed as car collides head-on with truck

author img

By

Published : May 18, 2020, 8:19 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள சாலையில் நேற்று நள்ளிரவு சரக்கு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் ரமேஷ் பாண்டியன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மேலும், அவருடன் காரில் வந்த சித்ரா, மகேந்திரன், மாரிச்செல்வம், நாகராஜ் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ரா, மாரிச்செல்வம், நாகராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.