தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் அருகே சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராதிகா என்பவரை பிப்ரவரி 3ஆம் தேதி வழிமறித்து ஏழு சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்செய்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் ஜனவரி 30ஆம் தேதி சின்னம்மாள் என்கிற மூதாட்டியின் கழுத்தை நெரித்து அவரிடமிருந்து ஐந்து சவரன் தங்க நகைகளைச் சிலர் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக கயத்தார் காவல் நிலையம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி, சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செல்வராதிகாவிடமிருந்து நகைகள் பறித்த வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்ற விக்கி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சபரிமணி, கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரையும், சின்னம்மாளிடம் நகைகள் பறித்த வழக்கில் இனாம் மணியாச்சியைச் சேர்ந்த சஞ்சீவிநாதன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 12 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.
இதையும் படிங்க... உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து விபத்து!