தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குருமலை சாலை சந்தீப் நகரில் திருநங்கைகளுக்கான குடியிருப்பு உள்ளது.
இங்கு 35 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனது சொந்த செலவில் திருநங்கைகளுக்கு கரோனா கால நிவாரணப் பொருட்கள் தொகுப்பு வழங்கினார்.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சத்யா எனப் பலர் கலந்து கொண்டனர்.