தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சியில் உள்ள எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல், ஊக்கமளித்தல் நிகழ்ச்சி பள்ளி தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
“கல்வி கற்பது சுகமே” என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுடன் அவர் உரையாடினார். மாணவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், சோர்வு அடையக்கூடாது, நாம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், பள்ளி காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சைலேந்திரபாபு எடுத்துரைத்தார்.
மாணவர்களிடம் கல்வி சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பினார். பதில் கூறிய மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியும், பல அறிவுரைகளும் அவர் வழங்கினார். முன்னதாக, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு உருவப் படத்தை ஓவியமாக வரைந்த மாணவ, மாணவிகளிடம் செல்பி எடுத்து கொண்டார்.
மாணவர்களுக்கு ஆட்டோகிராப்பும் வழங்கினர். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். இந்நிகழ்வில், எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மகாலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க:சென்னையில் 11 செ.மீ. மழை பெய்திருந்தாலும்..1 மணி நேரத்திற்குள் மழைநீர் வடிந்து விட்டது - அமைச்சர் கே.என்.நேரு..