ETV Bharat / state

'பொங்கலோ பொங்கல்' - தமிழர் மரபுப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடியில் 37 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்டு பண்டிகை கொண்டாடினர்.

தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்

author img

By

Published : Jan 4, 2023, 9:00 PM IST

'பொங்கலோ பொங்கல்' - தமிழர் மரபுப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடி: சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம், கடந்த 13 வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஒருங்கிணைத்து, 'ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து, இந்தியாவிற்கு அழைத்து வருகிறது.

கடந்த 2 வருடமாக கரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் வராத சூழ்நிலையில், 16-வது ஆண்டாக இந்த ஆண்டும் அதேபோல ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம், 17 குழுக்களாகப் பிரிந்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது.

இதில், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மன், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த 8 பெண்கள் உட்பட 37 பேர் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை, வழியாக நேற்று (3.1.2023) தூத்துக்குடி வந்தனர். இவர்கள், தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரத்தில் உள்ள 'பிரம்மஜோதி' என்ற தனியார் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக வந்த நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக, தோட்டத்தில் வாழை, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த அவர்களுக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர்களுக்கு கொய்யாப்பழம், பலாப்பழம், பனங்கிழங்கு, நெல்லிக்காய், ஸ்டார் பழம், முட்டை பழம், சப்போட்டா ஆகியவற்றை ருசித்தும்; இளநீர், ஆகிய இயற்கை பானங்களை அருந்தியும் மகிழ்ந்தனர்.

பின்னர், அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர். அவர்களுக்காக வரிசையாக தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், பொங்கலிடத் தேவையான பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவை அடங்கிய ஓலைப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தன.

பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்த வெளிநாட்டினர் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் குலவைச் சத்தம் போட்டுக்காட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு, வெளிநாட்டுப் பயணிகள் குலவைச் சத்தமும் எழுப்பி கலக்கினர்.

”பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வது தங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. இங்கு நடைபெறக்கூடிய பாரம்பரியமான இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டது உண்மையிலேயே தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியினையும் உற்சாகத்தையும் அளிக்கிறது” என்று இதில் கலந்துகொண்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூறினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.