தூத்துக்குடி: திரேஸ்புரம் பகுதியிலிருந்து ரஃஹிம் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் நேற்று காலை 11 பேர் முயல் தீவு பகுதியில் சங்கு குளிக்க சென்றுள்ளனர். சங்கு குளித்துவிட்டு திரும்பியபோது மாலை 3 மணி அளவில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கடலில் அலை தீவிரமானது. இதனால் எதிர் அலை மோதி படகு உடைந்து கடலில் மூழ்கியது.
சுமார் அரை மணி நேரமாக மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அப்பகுதியில் சங்கு குளித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் படகு மூழ்கியதை பார்த்து கடலில் தத்தளித்த 11 பேரையும் பத்திரமாக மீட்டு கரையில் சேர்த்தனர். இதில் 7 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் கடலில் மூழ்கியது.
இதையும் படிங்க: நடுக்கடலில் கவிழ்ந்த 3 மீன்பிடிப் படகுகள்.. கடலில் தத்தளித்த மீனவர்கள்.. தமிழ்நாடு அரசு நிவாரணம் அளிக்குமா?