ETV Bharat / state

முகத்தில் வண்ணம்பூசி நூதன போராட்டம்... சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க எதிர்ப்பு! - சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம்

தூத்துக்குடி: சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முட்டிபோட்டு, முகத்தில் வண்ணம்பூசி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்
author img

By

Published : Sep 11, 2019, 6:44 PM IST

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 3ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், கல்லூரிக்கு விடப்பட்ட காலவரையற்ற விடுமுறையைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவ மாணவிகள் முகத்தில் வண்ணப்பூச்சுகள் பூசிக்கொண்டு முட்டியிட்டு மீன்வளக் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மாணவ மாணவிகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவ மாணவிகள் இன்று 3ஆவது நாளாக முட்டியிட்டு போராடி வருகிறோம்" என்றனர்.

சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம்

இந்நிலையில் தூத்துக்குடி, பொன்னேரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மீன்வளக் கல்லூரி மாணவர்கள் அடங்கிய 21 பேர் கொண்ட குழு மீன்வளக் கல்லூரி பதிவாளரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். இந்த சந்திப்பில் மாணவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தால் மட்டுமே மாணவர்களின் போராட்டம் திரும்பப் பெறப்படும். இல்லையெனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து அமைதி வழியில் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Intro:சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முகத்தில் வண்ணம்பூசி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்ய வேண்டும், கல்லூரிக்கு விடப்பட்ட காலவரையற்ற விடுமுறையை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவ மாணவிகள் முகத்தில் வண்ணப்பூச்சுகள் பூசிக்கொண்டு முட்டியிட்டு மீன்வளக் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மாணவ மாணவிகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவ மாணவிகள் இன்று 3-வது நாளாக முட்டியிட்டு போராடி வருகிறோம். இந்நிலையில் தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன்வளக் கல்லூரி மாணவர்கள் அடங்கிய 21 பேர் கொண்ட குழு மீன்வளக் கல்லூரி பதிவாளரை சந்திக்க சென்றுள்ளனர். இந்த சந்திப்பில் மாணவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார் மட்டுமே மாணவர்களின் போராட்டம் திரும்பப் பெறப்படும். இல்லையெனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து அமைதி வழியில் போராடுவோம் என்றனர்.

பேட்டி: திவாகர், மேரி ஷிபானா, இந்திரஷாConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.