தூத்துக்குடியில் விசை படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து நாட்டுப் படகுகள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இன்று (பிப். 11) சனிக்கிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய மீன்கள் இருப்பு இல்லை.
தங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப் படகுகள் குறைவான அளவு படகுகளே இன்று கரைக்கு திரும்பின. இதனால் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது. மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ 600 ரூபாய் வரை விற்பனையான சீலா மின் ஆயிரம் ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனையானது.
இதேபோன்று 300 ரூபாய் விற்ற விளை மின் உழி ஆகியவை ரூபாய் 500 வரை விற்பனையானது. ஐலேஷ் பாறை உள்ளிட்ட மீன்கள் கிலோ 300 ரூபாய் வரை விற்பனையானது. சாலை மீன்கள் வரத்து மிக குறைவாக காணப்பட்டதால் ஒரு கூடை சாலை மீன் 3000 ரூபாய் வரை விற்பனையானது விலையையும் பொறுப்பெடுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளியில் தாத்தா - பாட்டி தினம் கொண்டாட்டம்!