ETV Bharat / state

வாடிக்கையாளர்களை தாக்கிய நிதி நிறுவனம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்களை தாக்க முயன்றதால், அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள்
நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jun 3, 2020, 3:47 AM IST

தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலமாக கடன் பெற்று வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் கடந்த 3 மாதமாக அபராத தொகையை வீடு தேடி மிரட்டி வசூலித்து வந்துள்ளது.

ஊரடங்கின் காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவிப்பு செய்துள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தனது தவணை தொகையை செலுத்த இயலாமல் இருந்துள்ளனர். ஆனால் அரசு உத்தரவையும் மீறி இந்நிறுவனம் அனைவருக்கும் அபராதம் விதித்து கட்டாய வசூல் செய்துள்ளது.

4 ஆயிரம் ரூபாய்க்கு 920 ரூபாயும், 2ஆயிரம் ரூபாய்க்கு 560 ரூபாயும் அபராத தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நிதி நிறுவனத்தில் விளக்கம் கேட்க முயன்றுள்ளனர். பஜாஜ் பைனான்ஸ் நிர்வாக ஊழியர்களோ, எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று மலுப்பலான பேசியதுடன், மரியாதை குறைவாகவும், ஒருமையில் பேசி வாடிக்கையாளர்களை தாக்கவும் வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், இது சம்மந்தமாக பேச உயர் அலுவளர்களிடம் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு நிர்வாக ஊழியர்கள், யாரும் எங்களுக்கு முதலாளி கிடையாது, எங்களை பற்றி புகார் தெரிவிக்க முடியாது என்று மிரட்டலான பதிலை சொல்லி, வெளியே போகுமாறு தள்ளி விட்டு அடிக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்தும், ஒருமையில் பேசி, அத்துமீறி நடந்துகொண்ட ஊழியர்களை கைது செய்யக் கோரியும் பஜாஜ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

காவல் துறையினரின் சமரச பேச்சுக்கு கட்டுப்பட்டு வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர். இதன் பின் நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.