தூத்துக்குடி மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலர் குமார் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் மூன்று நாள்களாக விசாரணை நடத்திவருகின்றார்.
மாலை 6 மணி வரை நடைபெற்ற விசாரணையில் சிறை பாதுகாவலர் அழகர்சாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் ஜெயராஜ், பென்னிக்ஸை சிறைச்சாலைக்கு அழைத்துவந்த போது அவர்களது உடம்பில் காயங்கள் இருந்ததா? அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? சிறை நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட சோதனைகள் என்ன? சிறைக்கு வந்த பொழுது அவர்களுடைய உடல் நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து அழகர்சாமி எழுத்துப்பூர்வமாக முக்கிய சாட்சியம் அளித்தார்.
மேலும் மனித உரிமைகள் ஆணைய அலுவலர் குமார் நாளை கோவில்பட்டி சிறைச்சாலை கைதிகளிடமும், அதையடுத்து மதுரை சிறைச்சாலை காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: காவல் ஆய்வாளர் உள்பட 20 பேரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!