தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், சூரன்குடி பகுதிகளில் மானாவாரி வேளாண் நிலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிளகாய், வெங்காயப் பயிர்கள் நடவுசெய்யப்பட்டுள்ளன.
மகசூல் பாதிப்பு
கடந்த இரு வாரங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக மானாவாரி வேளாண் நிலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
நடவுசெய்யப்பட்ட மிளகாய், வெங்காயப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. வெங்காயப் பயிர்களில் நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் இழப்பு
ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்துள்ள நிலையில், தற்போது பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி கெட்டுப்போனதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
வேளாண் அலுவலர்கள் குழுவினர் கிராமங்கள் வாரியாக மழை பாதிப்பு சேதாரங்களைக் கணக்கீடு செய்து முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்!