ETV Bharat / state

அழுகியப் பயிர்களுடன் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள் - farmers petition to tutucorin collector with rotten crops

தூத்துக்குடி: படைப்புழு, பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அழுகியப் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

farmers petition to tutucorin collector
farmers petition to tutucorin collector
author img

By

Published : Jan 12, 2021, 6:41 AM IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, ஆற்றங்கரை கிராமப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் இழப்பீடு தொகையைக் கேட்டு கைகளில் பூச்சித் தாக்குதலுக்குள்ளான, அழுகியப் பயிர்களுடன் வந்து கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்த செந்தில் ராஜா கூறுகையில், "விளாத்திகுளம் தாலுகாவுக்கு உள்பட்ட ஆத்தங்கரை, துரைசாமிபுரம், கொப்பம்பட்டி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட மானாவாரி விவசாயப் பயிர்கள் மழை காரணமாகவும் படைப்புழு, பூச்சித் தாக்குதல்களாலும் மகசூல் இழந்து நாசம் அடைந்துள்ளது.

இதனால் நாங்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த விவசாய நிலங்களை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய பயிர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழுகியப் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்

இதுகுறித்து வேளாண்மைத் துறை அலுவலர்கள், தாலுகா அலுவலர்கள் ஆகியோரிடம் மனு அளித்தும் எவ்விதப் பலனும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க... வேலூர் ஈமச்சின்னங்கள் பாதுகாக்கப்படுமா?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.