ETV Bharat / state

மழையில்லாமல் வாடிப்போன மக்காச்சோள பயிர் - நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை - விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடியில் மக்காச்சோள பயிர்கள் மழையில்லாததால் வாடிப் போனதாகக் கூறி தமிழக அரசு விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 2, 2023, 10:52 PM IST

நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவ மழை பெய்யாததால் பயிர்கள் பாதிப்படைந்ததாகக் கூறி வறட்சி நிவாரணம் வேண்டும் என தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து விவசாயி கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியைச் சுற்றி 2ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம், பாசிப் பயறு போன்றவைகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில், அனைத்து விவசாய பயிர்களும் பருவமழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் சேதமடைந்து விட்டன.

தூத்துக்குடியில், மிக மிக குறைந்த அளவு மழை பெய்ததனால் ஆடு மாடுகளுக்குக் கூட குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எந்த ஒரு ஊரணியிலும் சிறிதளவு கூட தண்ணீர் இல்லை. அனைத்து பகுதிகளிலும் பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில், உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - அவதியில் பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.