ETV Bharat / state

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது! - todaynews

கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் தொடர்புடைய பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரபல ரவுடி கைது
Rowdy arrest
author img

By

Published : May 10, 2021, 6:35 AM IST

தூத்துக்குடி மாவட்டம், ஆரோக்கியபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி முத்துக்குமார்(35). இவர் சிலுவைப்பட்டி சந்திப்பு வாட்டர் டேங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பான புகாரில் தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்குப்பதிவு செய்து ரவுடி முத்துக்குமாரை கைது செய்தார்.

இவர் மீது தூத்துக்குடி மத்திய பாகம், தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பொதுமக்களிடம் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்' - டிஜிபி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.