ETV Bharat / state

பயன்பாட்டு குளத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகள்.. தூத்துக்குடி கிராம மக்கள் வேதனை..

தூத்துக்குடியில் உள்ள ஏ.எம்.பட்டி என்ற கிராம குளத்தில், அருகில் உள்ள தொழிற்சாலையின் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பயன்பாட்டு குளத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகள்.. தூத்துக்குடி கிராம மக்கள் வேதனை..
பயன்பாட்டு குளத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகள்.. தூத்துக்குடி கிராம மக்கள் வேதனை..
author img

By

Published : Nov 2, 2022, 11:19 AM IST

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டமன்றம் தருவை குளம் ஊராட்சியில் ஏ.எம்.பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். பாசன வசதிக்காக இந்த கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது.

இந்த குளத்தில் இருந்துதான் விவசாயம் மற்றும் குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த குளத்திற்கு அருகே கோஸ்டல் எனர்ஜென் என்ற தனியார் அனல் மின் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆலையின் கழிவுகள், அருகே உள்ள குளத்தில் திறந்து விடுவதால் விவசாய நிலங்களின் உப்புத்தன்மை அதிகரித்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் குடிநீராகவும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த கழிவுநீரை குளத்தில் ஆடு, மாடுகள் குடிப்பதால் இறந்து விடுவதாகவும், குளத்து நீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு தோல் நோய், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வருவதாகவும், தனியார் ஆலைக்க்கழிவுகள் கலப்பது குறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஏன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் 600 குடும்பம் உள்ளது. எங்களின் தொழிலே ஆதி காலம் முதல் விவசாயம்.மழை இல்லாத நேரத்தில் கண்மாயை பராமரித்து விவசாயம் செய்வோம். ஆனால் தற்போது தனியார் நிறுவன கழிவுகளை இந்த கண்மாயில் கலந்து விட்டதால், விவசாயம் செய்யும் மக்கள் வெளியே சென்று வேறு தொழில் செய்து வருகின்றனர்.

பயன்பாட்டு குளத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகள்.. தூத்துக்குடி கிராம மக்கள் வேதனை..

இந்த தனியார் கம்பெனியின் நடுவே பாரம்பரிய ஓடையில், எப்போதும் வென்றான் கிராமத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. இங்கு வடக்கு கண்மாய், தெற்கு கண்மாய் என 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கோடை காலத்தில் கூட இந்த கண்மாய் தண்ணீரை பயன்படுத்துவோம்.

ஆனால் இப்போது மழைக்காலத்தில்கூட தண்ணீர் பயன்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு தண்ணீர் மாசடைந்துள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் ஆடுகள் இறந்து விடுகிறது. கடந்த வருடத்தில் விவசாயம் செய்ய முடியாமல் 80,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

இதனால் விவசாய தொழிலை விட்டு விட்டு மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்து வரும் மழைக்காலத்தில் விவசாயம் செய்ய முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் அலட்சியம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.