ETV Bharat / state

ஸ்ரீவைகுண்டத்தில் மேலுமொரு சதிக்கல் கண்டுபிடிப்பு! - தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியால் சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல்

author img

By

Published : Sep 17, 2020, 10:18 PM IST

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியால் மேலுமொரு சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முனைவர்பட்ட தொல்லியல் ஆய்வு மாணவர் ஆசிரியர் சிவகளை மாணிக்கம், இந்திய தொல்லியல்துறை ஆய்வாளர்கள் பிரசன்னா, யத்தீஸ்குமார், கல்வெட்டாய்வாளர் வீரமணிகண்டன் ஆகியோர் வல்லுனர்களின் வழிகாட்டுதல்கள்படி பல்வேறு தொல்லியல் ஆதாரங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அனை அருகே குருசுகோயில் வழியாக செல்லும் வாய்க்கால் படித்துறையில் 16 முதல் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சதிக்கல்லை கண்டுபிடித்தனர். தற்போது ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சாமிபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒளிமுத்துசாமி கோயில் அருகே மேலுமொரு சதிக்கல்லைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் கணவர், மனைவி என இரு சிலைகள் புடைப்பு சிற்பமாக உள்ளன.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “பழங்காலத்தில் புடைப்பு சிற்பத்திற்கு மடாலயம் கட்டி வழிபட்டுள்ளனர். இரண்டு மீட்டர் அகலமும், மூன்று மீட்டர் உயரமும் கொண்ட இந்த மடாலயத்தின் வாசல் பகுதியின் இருபுறங்களிலும் மூன்று ஜோடி விளக்கு மாடங்கள், 20 செ.மீட்டர் உயர இடைவெளிகளில் உள்ளன.

தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மடாலயம்

இந்தக்கல்லானது 58.செ.மீ நீளமும், 47 செ.மீ உயரமும் 12.செ.மீட்டர் அகலமும் கொண்டது. இது ஒரே கல்லில் செய்யப்பட்ட இரண்டு புடைப்பு சிற்பகளாகும். இந்த சிற்பத்திலுள்ள ஆண், பெண் சிற்பங்களானது, 60 செ.மீ., உயரமும், 40 செ.மீ., அகலமும் கொண்டுள்ளது. இரு சிற்பங்களும் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ளன.

கணவர் இறந்ததால் அவருடைய மனைவிகள் இருவரும் கணவனின் உடல் எறியும் சதியில் தீயினுள் பாய்ந்து உயிர்துறந்த பெண்களின் கற்பை போற்றும் விதமாக இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது, சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் என அழைக்கப்பட்டது.

இந்த சதிக்கல்லை தீப்பாய்ந்த அம்மனாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், இவ்வகையான நடுகல்கள் விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காணப்படுகின்றன” என்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது புராதன கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.