ETV Bharat / state

திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு - Otapidaram

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட பகுதியில் வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முத்தையாபுரத்தில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதிரத்து மா.சுப்பரிமணியன் வாக்கு சேகரிப்பு
author img

By

Published : May 14, 2019, 8:57 AM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையா போட்டியிடுகிறார். இந்நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அவரை ஆதரித்து, சென்னை மாநகர முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் நேற்று முத்தையாபுரம் பகுதிக்கு உட்பட ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டியில் வீடு, வீடாகச் சென்று திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

"பொது மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள், தேவைகள் குறித்து தி.மு.க கழக நிர்வாகிகளிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள். குறிப்பாக இப்பகுதியில் உள்ள பெட்டை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குளம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் கொள்ளளவு மிகக் குறைந்த அளவே பிடிக்கிறது.

திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு

மேலும் நிலத்தடி நீர் மட்டமும் மிகக் குறைவாகவே உள்ளதால் ஒரு போகம் மட்டுமே விவசாயப் பயிர்கள் விளைவதாக, விவசாயிகள் பொது மக்களிடத்தில் குறை கேட்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நிறைவேற்றித் தருவதாக கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் திமுகவிற்கே வாக்களிக்க தயாராக உள்ளனர்" என்றார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டியில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் அவர், ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு. கழகத்தின் சார்பில் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து அவர்கள் தொடர்ந்து தி.மு.கழக நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்கள். குறிப்பாக இப்பகுதியில் உள்ள பெட்டை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் கொள்ளளவு மிக குறைந்த அளவே பிடிக்கிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் மிக குறைவாகவே உள்ளது. இதனால் ஒரு போகம் மட்டுமே விவசாய பயிர்கள் விளைவதாகவும் விவசாயிகள் பொது மக்களிடத்தில் குறை கேட்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நிறைவேற்றி தருவதாக கழகத் தலைவர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுபோக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவும், வங்கியில் அடமானம் வைத்து உள்ள நகைகளை மீட்டுத்தரவும் உறுதியளித்திருக்கிறார். மேலும் வீடற்ற ஏழை விவசாய குடும்பத்தினருக்கு 3 சென்ட் நிலம் வழங்குவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருக்கிறார். இப்பகுதியில் உள்ள மக்களின் முக்கிய பிரச்சினையாக வீட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் கூறினர். அதனை குறைக்கவும் திமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் திமுக விற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.