ETV Bharat / state

பாரதியார் பிறந்த மாவட்டத்தில் பட்டினியில் வாடும் மக்கள்! - migrant workers in thoothukudi

தூத்துக்குடி: தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறிய பாரதியார் பிறந்த மாவட்டத்தில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் உணவின்றி தவிக்கின்றனர்.

migrant workers
migrant workers
author img

By

Published : Apr 17, 2020, 12:23 PM IST

Updated : Jun 2, 2020, 7:33 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதனால் அனைத்து தொழில்களும் ஸ்தம்பித்து பல தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதில் தினக்கூலியாக பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் நிலைமைதான் மோசமாக இருக்கிறது. வீட்டில் இருந்த சிறிது உணவு பொருட்களும் சில நாள்களிலேயே காலியாகிவிட தற்போது வீதிகளையே வீடாக்கி தங்கிவருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த 18 நாட்களுக்கும் மேலாக பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் உள்ளிட்டோரின் ஏற்பாட்டின் பேரில் சாலையோரங்களில் உணவின்றி தவிப்பவர்களுக்கும், கூலி தொழிலாளர்களுக்கும் தினசரி உணவு வழங்கிவரப்பட்டது.

இதன் காரணமாக ஆறாத வயிற்றுப் பசிக்கு அரைகுறையாக உணவு தேவை பூர்த்தியாகி வந்தது. இந்த நிலையில் தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என யாரும் நேரடியாக மக்களுக்கு உணவு வழங்கக் கூடாது என்றொரு உத்தரவை கடந்த சில நாள்களுக்கு முன்பு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சாலையோரங்களில் தவித்து வந்தவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக உணவு வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

அதற்கு ஈடாக, ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அம்மா உணவகம் மூலம் இலவசமாக எந்த உணவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்றே மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

வேலை இழந்து தவித்து வரும் இந்த கூலித்தொழிலாளர்கள் ஐந்து ரூபாய் கொடுத்து அம்மா உணவகங்களில் உணவு வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு சாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் ஒரு அவலநிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அவர்களை சம்மட்டியால் அடித்துள்ளது.

கையில் வருவாய் இன்றி, உணவின்றி வீதியோரத்தில் அமர்ந்திருக்கும் இவர்களுக்கு கடந்த 19 நாட்களாக விடியல் என்பதே ஒரு வேளை சோற்றுக்காக மட்டும்தான் என்றாகிவிட்டது. இதுபோன்று கூலி தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக ஊர்விட்டு ஊர்வந்து சிக்கிக்கொண்டவர்களின் இளம்பெண்களும் அடங்குவர் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

பாரதியார் பிறந்த மாவட்டத்தில் பட்டினியில் வாடும் மக்கள்

அவசரத் தேவைக்கு ஒதுங்கக்கூட ஒதுக்குப்புறத்தை நினைத்து பார்க்கமுடியாத இவர்களின் வாழ்வு கடந்த 19 நாட்களாக நரகத்தின் வாழ்வை காட்டிலும் மிகக்கொடுமையாகவே கழிந்திருக்கிறது."தீயோர்க்கும் நன்மை செய்ய" பழகிக்கொடுத்த நம் சமூகத்தில்தான் தீஞ்சுவையறியும் நாவுக்கு ஒருவேளை உணவுக்கூட கிடைக்காத பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஆதரவின்றி அலையும் நபர்களில் கண்ணில் கண்டவர்களை பிடித்துவந்து உணவுத்தேவையை பூர்த்தி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் இனி உணவு வழங்குவதற்குக்கூட அரசின் உதவியை எதிர்பார்க்க நேர்வது சரியான வழிமுறைதானா? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

அரசின் இந்த உத்தரவு, சில நல்ல மனம் படைத்தவர்கள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் உணவைக்கூட அரசு தட்டிப் பறிக்ககும் வகையில் உள்ளது என உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடியில் இதுபோல உணவின்றி தவித்துவரும் மக்களுக்கு காவல் துறையினர் மூலம் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது சற்று ஆறுதலாக உள்ளது. தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என முழங்கிய பாரதி பிறந்த மாவட்டத்தில் பட்டினியால் தவிக்கும் நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Last Updated : Jun 2, 2020, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.