ETV Bharat / state

"வேங்கைவயல், நாங்குநேரி விவகாரத்தை திசை திருப்பவே திமுக 'நீட்' குறித்து பேசுகிறது" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு - Nanguneri Caste discrimination

Tamilisai Soundararajan: நாங்குநேரி விவகாரம், வேங்கை வயல் விவகாரம், மனிதர் மீது சிறுநீர் கழிப்பது ஆகிய பிரச்சனைகள் இருக்கையில், நீட் தேர்வு குறித்து தொடர்ந்து பேசுவது ஏன்? என கேள்வியெழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன் 'சனாதனம்' குறித்து பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மாலத்தீவில் 12 தமிழர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நமது நாட்டினர் சட்ட ரீதியாக எங்கும் பாதிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 8:14 PM IST

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது நிறுவனர் தின விழாவில் பங்கேற்பதற்காக இன்று (நவ.10) தூத்துக்குடி வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'தமிழக அரசிடமிருந்து தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால், முதலாவதாக சகோதரியாக தீபாவளி வாழ்த்துக்களை கூறுகிறேன். சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சனையினால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. ஏனென்றால், தச்சநல்லூரில் 2 இளைஞர்களை சாதியை சுட்டிக் காண்பித்து சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்துள்ளதை தான் சொல்ல வேண்டும்.

நாங்குநேரி விவகாரம், வேங்கை வயல் விவகாரம், மனிதர் மீது சிறுநீர் கழிப்பது ஆகிய கவலையளிக்கும் பிரச்சனைகள் இருக்கையில், நீட் தேர்வு (NEET Exam) மீது தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் செலுத்துகிறது. இது தவறு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில், பிரச்சனை உள்ளதென்றால் சட்ட ரீதியாக அணுகலாம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'சனாதனம்' பற்றி பேசியதற்கு மன்னிப்பே கேட்காமல், நான் பேசியது பேசியதுதான் எனக் கூறுகிறார். மன்னிப்பு கேட்பதற்கு நிறைய விஷயம் இருக்கு. இலங்கையில், முதலமைச்சர் பேச்சு ஒளிபரப்ப முடியவில்லை என்று வருந்துகின்றனர். இலங்கையில் உச்சகட்ட பிரச்சனைகள் நடந்த போது மத்தியில் ஆட்சியில் இருந்தும், எந்த அளவுக்கு தமிழர்களைப் பாதுகாக்க முயற்சித்தார்கள்? காங்கிரஸுடன் கூட்டணி வைத்துகொண்டு இதற்காக என்ன தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டனர்? இப்போது இதைப் பார்த்தப் பின்பு கூட மேலும், அரசு தீவிரமாக செயலாற்ற வேண்டும்' என வலியுறுத்தினார்.

'பீகார் முதலமைச்சர் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது, முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு மிக மிக கண்டிக்கத்தக்கது. மேற்குவங்கத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள் என்ற செய்தி, எதிரில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. 33% இடஒதுக்கீடு நாட்கள் கழித்து வருவதை எதிர்க்கும் இவர்கள் சாமானிய பெண்களுக்கு மரியாதை கொடுக்க தயங்குகிறார்கள் என்பது எனது கருத்து. யார் ஊழல் பண்ணினாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது காழ்ப்புணர்ச்சியினால் தான், அரசியல் எதிர்ப்பை காண்பிப்பதற்கு என்று கூறுகின்றனர். உங்கள் வீட்டில் பணம் எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. கட்டி கட்டியாக தங்கம், கட்டுக்கட்டாக பணம் இருக்கின்றது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்' எனப் பதிலளித்தார்.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருப்பதாக குறித்த கேள்விக்கு? குலசேகரன்பட்டினத்துக்கு மோடி வருவது முடிவு செய்யப்படவில்லை. ராக்கெட் ஏவுதளம் அமைவதில் நம் பங்கு மிகப்பெரியது. நாடு வளர்ச்சி அடைவதற்கு இது மிக பெரிய உதவியாக இருக்கும். மாலத்தீவில் தூத்துக்குடி மீனவர்கள் பிடிபட்டது குறித்த கேள்விக்கு, பாரத தேசத்தைப் பொறுத்த அளவிற்கு சட்டரீதியாக நம் தேசத்தை சார்ந்தவர்கள் எங்கும் பாதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்' எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் டூ கோவை விமானத்தில் அரிய வகை உயிரினங்கள் கடத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.