ETV Bharat / state

ஸ்டெர்லைட் விஷயத்தில் திமுக நாடகமாடி வருகிறது - தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு! - edapaddi

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 243 ஏக்கர் நிலம் வழங்கியது ஸ்டாலின் என்பதை தூத்துக்குடி மக்கள் நினைவு கூற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் விஷயத்தில் திமுக நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டம்
author img

By

Published : Apr 2, 2019, 10:49 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் நலம்பெற வலிமையான ஆட்சி வேண்டும். வலிமையான ஆட்சியை தருவதற்கு நல்லதொரு வலிமையான தலைமை வேண்டும். வலிமையான தலைமைதான் நிலையான ஆட்சி தரமுடியும். அந்த வலிமை பிரதமர் மோடியிடம்தான் உள்ளது. நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது. எனவே, பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும். அப்போது தான் நாடு வளம் பெறுவதோடு பாதுகாப்பாக இருக்கும். நாம் அமைத்திருக்கும் கூட்டணி மெகா கூட்டணி. இதைப்பார்த்து இன்று ஸ்டாலின் என்ன செய்வதென்று தெரியாமல் பேசமுடியாமல் திணறி வருகிறார்.

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த ஆட்சி நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் மூன்றாயிரம் குளங்களை தூர்வாரி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 400 ஆயிரம் கோடியை தமிழகம் முதலீடாக பெற்றுள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறி திமுக கூட்டணி கட்சியினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் இந்த தேர்தல் முடிந்த பின்பு அரசு அறிவித்தது போல ஏழை குடும்பங்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை கட்டாயம் வழங்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 243 ஏக்கர் நிலம் வழங்கியது அன்றைய தொழில்துறை அமைச்சர் ஸ்டாலின்தான். ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அவரே சட்டசபையில் கூறினார். எனவே, இன்று யாரால் இந்த ஆலை இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை தூத்துக்குடி மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் விஷயத்தில் திமுக நாடகமாடி வருகிறது.

கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபம் 5 கோடி செலவில் திறந்து வைக்கப்பட்டது. திருச்செந்தூரில் ஆதித்தனாருக்கு ரூ.1.30 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 322 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 282 கோடியில் தண்ணீர் மேம்பாட்டு திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர்மிகு நகரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தில் இருந்து 6 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தது அதிமுக‌ அரசுதான் என அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,  அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்பொழுது,

நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் நலம்பெற வலிமையான ஆட்சி வேண்டும். வலிமையான ஆட்சியை தருவதற்கு நல்லதொரு வலிமையான தலைமை வேண்டும். வலிமையான தலைமை தான் நிலையான ஆட்சி தரமுடியும். அந்த வலிமை பிரதமர் மோடியிடம் தான் உள்ளது. நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது. பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும். அப்போது தான் நாடு வளம் பெறும். பாதுகாப்பாக இருக்கும். நாம் அமைத்திருக்கும் கூட்டணி மெகா கூட்டணி. இதைப்பார்த்து
இன்று ஸ்டாலின் என்ன செய்வதென்று தெரியாமல் பேசமுடியாமல் திணறி வருகிறார்.

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த தேரதல்களிலே சொன்ன திட்டங்களை எல்லாம் இந்த ஆட்சி நிறைவேற்றி தந்திருக்கிறது.

தமிழகத்தில் 3000 குளங்களை தூர் வாரி புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 400 ஆயிரம் கோடியை தமிழகம் முதலீடாக பெற்றுள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறி திமுக கூட்டணி கட்சியினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் இந்த தேர்தல் முடிந்த பின்பு அரசு அறிவித்தது போல ஏழை குடும்பங்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை கட்டாயம் வழங்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 243 ஏக்கர் நிலம் வழங்கியது அன்றைய தொழில் துறை அமைச்சர் ஸ்டாலின் தான். 1500 கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அவரே சட்டசபையில்  கூறினார்.

எனவே,இன்று யாரால் இந்த ஆலை இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை தூத்துக்குடி மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் விஷயத்தில் திமுக நாடகமாடி வருகிறது.

கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபம் 5 கோடி செலவில்  திறந்து வைக்கப்பட்டது.
திருச்செந்தூரில் ஆதித்தனாருக்கு 1.30கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 322 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க பட்டுள்ளது. இதனால் 1 லட்சம்  விவசாயிகள் பயன்அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 282 கோடியில் தண்ணீர் மேம்பாட்டு திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர்மிகு நகரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தில் இருந்து 6 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தது அதிமுக‌ அரசுதான் எனக்கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.