தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினாக கலந்துகொண்டு மருத்துவர் ராஜேஷ் திலக் தொடங்கிவைத்தார். எட்டு வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு ஆண், பெண் எனத் தனித்தனியே மினி சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்த குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை சங்க நிர்வாகிகள் சுப்புராஜ், ஞானதுரை ராஜலிங்கம் ஸ்டீபன் ஆகியோருடன் 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பை ஃபைனல்: 177 ரன்களுக்கு சுருண்ட இந்தியா