ETV Bharat / state

விஏஓ லூர்து பிரான்சிஸ் நஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளுபடி! - today latest news

VAO Lourdes Francis Suit for damages: 2018ஆம் ஆண்டு சேர்வைக்காரன் மடம் தலையாரியைத் தாக்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விஏஓ லூர்து பிரான்சிஸ் நஷ்ட ஈடு கோரிய வழக்கை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

VAO Lourdes Francis Suit for damages
விஏஓ லூர்து பிரான்சிஸ் நஷ்ட ஈடு கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:15 PM IST

தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (VAO-Village Administrative Officer) பணிபுரிந்து வந்தவர், லூர்து பிரான்சிஸ். இவரை கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மர்ம நபர்கள் அலுவலகத்தில் புகுந்து அரிவாளால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினரிடம் விஏஓ லூர்து பிரான்சிஸ் புகார் அளித்துள்ளார். அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட கலியாவூர் வேதகோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

முன்னதாக லூர்து பிரான்சிஸ் கடந்த 2018ஆம் ஆண்டு சேர்வைக்காரன் மடம் விஏஓ-வாக பணியாற்றியபோது அங்கு தலையாரியைத் தாக்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது தன்னை இடைநீக்கம் செய்தது தொடர்பாக ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே லூர்து பிரான்சிஸ் மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தற்போது மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமிதா இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் ப்டிங்க: வாச்சாத்தி மலைக்கிராம மக்களுக்கு எதிராக நடந்த வன்முறை; செப்.29ஆம் தேதி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.