கோவில்பட்டி நகராட்சி 30ஆவது வார்டுக்குட்பட்ட பாரதி நகர், அம்பேத்கர் நகர் இணைப்பு பகுதியில் உள்ள தெருக்களில் சாலை, வடிகால் வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இந்நிலையில், தற்போது கோவில்பட்டியில் பெய்துவரும் தொடர் மழையால் அம்பேத்கர் நகரில் உள்ள தெருக்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து சிறிய குளங்கள் போல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அம்பேத்கர் நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த பெண்கள் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை அமைத்து, வடிகால் வசதிசெய்து தர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: கத்திக்குத்து நகராக மாறிய முத்து நகர்: நடவடிக்கை என்ன? - தூத்துக்குடி எஸ்பி விளக்கம்!