ETV Bharat / state

'ஓரு மாத ஊதியத்தோடு விடுமுறை' - தூய்மை தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்! - தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துப்புரவு தொழிலாளர் மாநாடு
author img

By

Published : Mar 24, 2019, 12:00 AM IST

விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மாநாடு ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் காலமுறை ஊதியமாக மாதந்தோறும் ரூ.18ஆயிரம், பணிக்கொடையாக ரூ. 5 லட்சம், மாத ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரம், இலவச முழு உடல் பரிசோதனை, வருடத்திற்கு ஒருமாத உதியத்தோடு விடுமுறை, இலவச இருசக்கர வாகனம், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கோவில்பட்டியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புவு தொழிலாளர்களின் வாழ்வாதர கோரிக்கை மாநாட்டில் கிராம ஊராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை, மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவில்பட்டியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புவு தொழிலாளர்களின் வாழ்வாதர கோரிக்கை மாநாடு ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு மக்கள் ஆளுகை மையம் பொதுச்செயலாளர் தாஸ், ஊராக வளர்ச்சித்துறை கூட்டமை மாநில ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் காலமுறை ஊதியத்தில் மாத ஊதியம் ரூ.18000 வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ 5லட்சம் மற்றும் ரூ. 5ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும், மீண்டும் தூய்மை தொழிலாளர் நலவாரியத்தை இயக்கிட வேண்டும், இலவச முழு உடல் பரிசோதனையும், வருடத்தில் 1மாதத்துடன் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்,இலவசமாக இரு சக்கர வாகனம், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்,இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பு ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களின் குழந்மைகளின் கல்வி தகுதிகேற்ப வாரிசு பணி மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு இலவச திட்டங்களை துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கிராம துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Photo FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.