தூத்துக்குடி: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அது போல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும், கரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையும், அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது. என நம்பிக்கை தெரிவித்த அவர், மரத்தடி கீழ் அமர்ந்து படித்துவரும் பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் திருக்குறள் அதிகமாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Audio Leak - இறப்பு சான்றிதழ் கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட விஏஓ