தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் தொழில் நகரமாக விளங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடியில், ஒரு காலத்தில் மக்கள் தங்களின் குடிநீர்த் தேவைக்கு தண்ணீரை தூர்த்து எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக "தூத்துக்குடி" என்று இவ்வூருக்குப் பெயர் வந்தது.
தூத்துக்குடி நகரின் குடிநீர் தேவையை கவனத்தில் கொண்டு நீண்ட கால அடிப்படையில் அப்போதயை நகர் மன்ற தலைவராக இருந்த குரூஸ் பர்னாந்து, தூத்துகுடியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையான வல்லநாடு பகுதியிலிருந்து குழாய் மூலம் தூத்துக்குடி நகருக்கு குடிநீரைக் கொண்டு வந்தார்.
அதன் நினைவாக தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அவருக்கு அலங்கார நீரூற்றுடன் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரூஸ் பர்னாந்தின் 150ஆவது பிறந்த தினமான இன்று, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவரது பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் முரளிதரன், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் ஆகியோருடன் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் குரூஸ் பர்னாந்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:
குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் - பரதர் சங்கத்தினர் வேண்டுகோள்