தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகேயுள்ள படர்ந்தபுளி கனரா வங்கி கிளை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் விழா நடந்தது.
பயிர் கடன் என்பது விவசாயிகளுக்கு ஒரு குறுகிய கால கடனாகும். இக்கடனானது வங்கிகள், கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த பயிர் கடனை விதைகள், உரங்கள், இயந்திரங்கள் போன்ற பல்வேறு பொருள்களை வாங்க பயன்படுத்தலாம். பயிர் உற்பத்திக்குப் பிறகு கடன் பொதுவாக ஒரே தவணையில் திருப்பி செலுத்தப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு பயிருக்கும் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் அளவு ஏக்கருக்கு எவ்வளவு என்பது மாவட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் பேரில் தீர்மானிக்கப்படுகிறது.
எத்தனை ஏக்கர், என்ன பயிர் என்பதை கொண்டு கடன் அளவு நிர்ணயிக்கப்படும். நடைப்பெற்ற இவ்விழாவிற்கு, வங்கியின் கிளை மேலாளர் முத்து செல்வக்குமார் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கினார்.
இவ்விழாவில் 50 விவசாயிகளுக்கு, அவர்கள் எத்தனை ஏக்கர், என்ன பயிர் என்பதை கொண்டு 50 ஆயிரம் முதல், ஒருலட்சத்து 50 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு பயிர்கடனாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பி.ஹெச்டி மாணவியிடம் லஞ்சம்- பேராசிரியைக்கு 3 ஆண்டு சிறை!