தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நக்கலமுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் முத்துக்குமார் (33). இவர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி முத்துக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் விமானம் மூலமாக நேற்று (மே.19) சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் சொந்த ஊரான நக்கலமுத்தன்பட்டி கிராமத்திற்கு இன்று (மே.20) காலை கொண்டு வரப்பட்டது. முத்துக்குமாரின் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கிராம மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்குள்ள மயானத்திற்கு உடல் எடுத்து செல்லப்பட்டு பெங்களூரு, 18ஆவது இன்ஜினியரிங் ரெஜிமெண்ட் பிரிவு கேப்டன் முருகன் தலைமையில் ராணுவ மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்திய பின் முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: படகு மீது கப்பல் மோதி விபத்து: மறைந்த ராமநாதபுரம் மீனவரின் உடல் தகனம்