தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை மீண்டும் கனமழை பெய்தது.
இந்த மழையால் பள்ளமான பகுதிகளில் கூடுதலாக மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாசிலாமணிபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் மீன்பிடித்தும், துணி துவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி - திருவாரூரில் பரபரப்பு!