ETV Bharat / state

திமுக நிர்வாகி கொலை மிரட்டல்: வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் குழந்தைகளுடன் வீதி வீதியாக அலைந்து வரும் பெற்றோர்..

Thoothukudi Crime News: தூத்துக்குடி திமுக வட்டச் செயலாளர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி குழந்தைகளுடன் பெற்றோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் குழந்தைகளுடன் வீதி வீதியாக அலைந்து வரும் பெற்றோர்
திமுக நிர்வாகி கொலை மிரட்டல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:51 PM IST

திமுக நிர்வாகி கொலை மிரட்டல்

தூத்துக்குடி: திமுக வட்டச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதனால், வசித்து வரும் வாடகை வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் வீதி வீதியாக அலைந்து வருவதாகவும் முனீஸ்வரி என்பவர் புகார் அளித்துள்ளார். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இது தொடர்பாக அப்பெண் இன்று (ஜன.13) கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவில் வசிப்போர் பெரியசாமி-முனீஸ்வரி தம்பதியினர். இவருக்கு 3 மகன்கள்மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவ்விருவரும் தங்களது 15 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து திமுக வட்டச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாகவும் ஆகவே, இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு ஒன்றை அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முனீஸ்வரி, “சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, கிருஷ்ணராஜபுரம் பகுதி திமுக வட்டச் செயலாளர் ஜெயக்குமாரின் மகன்கள் இருவரும், தனது 10 வயதாகும் இளையமகனை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, எனது இளையமகன் வீட்டிற்கு ஓடிவந்து நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவனது சகோதரனிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார்.

என் இரு மகன்களும் தம்பி மீதுள்ள பாசத்தில் ஏன் அடித்தீர்கள்? என ஜெயக்குமாரின் மகன்களிடம் கேட்டபோது இருதரப்பினருக்கும் வாய் தகராறு முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் காயமடைந்தனர். தனது மகனுக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து ஆவேசம் அடைந்த திமுக வட்டச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 10 நபர்கள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எனது பிள்ளைகளை அடித்தனர். அதோடு, பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.

அப்போது அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த வடபாகம் காவல் நிலைய போலீசாரைக் கண்டதும் அக்கும்பலினர் தப்பியோடினர். இதனால் படுகாயமடைந்த எனது மகனை போலீசார் கூறிய படி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழிமறித்த ஜெயக்குமார் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோர் என் மகனை கொலை செய்யப்போவதாக மிரட்டினர்.

இதையடுத்து காயமடைந்த இரண்டு மகன்களையும் பாதுகாப்பிற்காக உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து திரும்பிய அவரது கணவரை வழிமறித்த ஜெயக்குமார் இரும்பு ராடால் அடித்து துன்புறுத்தியுள்ளார். அச்சமயத்தில் காவல்துறையினர் வந்ததும் ஜெயக்குமார் உள்ளிட்ட கும்பலினர் மீண்டும் தப்பியோடினர்.

காவல்துறையினர் பாதுகாப்பாக இருக்க எங்களை அறிவுறுத்திய நிலையில் மீண்டும் இரவு 2 மணி அளவில் ஜெயக்குமார், அவரது தம்பி பெரியசாமி அவரது பிள்ளைகள் உள்ளிட்ட 20 பேர் என் வீட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். இதைத்தொடர்ந்து அப்போது அங்கு விரைந்த காவல்துறையினர் தங்களைக் காப்பாற்றியதாக' அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், 'மீண்டும் இரவு 3 மணியளவில், எனது மகன் மற்றும் கணவர் வேலை செய்யும் கடைக்குச் சென்று கடையையும் அடித்து நொறுக்கி கடை மாஸ்டரை கடத்திக் கொண்டுபோய் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து எனது குழந்தைகள் பள்ளி படிப்பிற்கு செல்வதை இவர்கள் தடை செய்கிறார்கள். எனது மகள் 10ஆம் வகுப்பு படிக்கிறார், அவள் அரசு தேர்விற்காக படித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் எங்களை வீட்டில் வாழவிடாமல் ஜெயக்குமார் மற்றும் அவரது உடன் பிறப்புகள் அடியாள்களுடன் மிரட்டுவதால் என் பிள்ளைகள் பள்ளி செல்ல முடியாமல், நானும் எனது குடும்பத்தினரும் உயிருக்கு பயந்து வருகிறோம்.

நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது குடும்பத்தினர் அனைவரின் உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு அளித்து எனது பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடாமல் அவர்களின் எதிர்காலத்திற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும்” என அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: முறை தவறிய உறவில் இருந்த ஒரு பெண்ணுக்கு போட்டி; நண்பனை கொலை செய்த நபர்.. நாகை சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.