ETV Bharat / state

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கிய ஸ்பிக் தொழிற்சாலை - Thoothukudi latest news

தூத்துக்குடி: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை ஸ்பிக் தொழிற்சாலை வழங்கியுள்ளது.

ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் கரோனா நிவாரண உதவி

author img

By

Published : May 22, 2021, 9:33 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை ஸ்பிக் தொழிற்சாலை இயக்குநர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் வழங்கினர்.

மேலும், கரோனா தடுப்பு சிகிச்சைக்காக ரூ.27 லட்சம் ரூபாய் மதிப்பில் 400 ஆக்ஸிஜன் ஃப்ளோ மீட்டர் மருத்துவ உபகரணங்களையும் இலவசமாக வழங்கினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், "தூத்துக்குடியில் கரோனா சிகிச்சைக்காக தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதை அண்மைக் காலமாகப் பார்க்க முடிகிறது. எனவே, அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு 1,845 பகுதிகளில் 36 குழு மூலம் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதை கண்காணிப்பதற்கு தனியாக செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் கரோனா நிவாரண உதவி

இது தொடர்பாக ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் வெளியான செய்திக் குறிப்பில், "உலகளாவிய கரோனா அச்சுறுத்தலை சமாளிக்க ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையைக் கருத்தில் கொண்டு ஸ்பிக் தொழிற்சாலையில் ரூ.1.50 கோடி முதலீட்டில் புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் அலகு தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தயார் செய்யப்படும் ஆக்ஸிஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். நாளொன்றுக்கு 170 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவை மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘துணியாலான முகக்கவசம் போதாது’ நடிகை சரண்யா பொன்வண்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.