தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துநல்லூரைச் சேர்ந்த ஒருவர், பேட்மாநகரில் நான்கு பேர், கயத்தாறில் மூவர், காயல்பட்டினம், ஆத்தூரில் தலா இருவர், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நான்கு பேர் என மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 13 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், நான்கு பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணீக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்று பேர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அய்யனாரூத்து பகுதியையும், மற்றொருவர் தங்கம்மாள்புரம் பகுதியையும் சேர்ந்தவர்.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் நான்கு பேருக்கு தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளர் ஒருவர் மூலம் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து 20க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் ஆய்வில் உள்ளன.
இதையும் படிங்க: கோவிட்-19 வைரஸின் தூதுவர்களா வௌவால்கள்!