ETV Bharat / state

தொல்லியல் ஆய்வாளர்கள் இருவருக்கு கரோனா

தூத்துக்குடி: சிவகளை அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்  பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Corona infection for two archaeologists in Thoothukudi

author img

By

Published : Aug 14, 2020, 2:53 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த மே 25ஆம் தேதி மாநில அரசு சார்பில் முதல்கட்டமாக அகழாய்வு பணி தொடங்கியது. இந்தப் பணியில் 10 தொல்லியல் அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆய்வு பணியில் சிவகளை பகுதியை சேர்ந்த 80 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிவகளையில் ஆய்வுக்காக 50 குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் ஆய்வாளர்களில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வு மாணவர்கள், பணி செய்த 80 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.