ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி எச்சசரிக்கை! - thoothukudi district news

தூத்துக்குடி: கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

corona awarness for thoothukudi people
corona awarness for thoothukudi people
author img

By

Published : Apr 9, 2021, 6:13 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை நாளை முதல் அமலுக்கு வருகின்றனன.

இதை முன்னிட்டு தூத்துக்குடியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசங்கள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கரோனா இரண்டாவது அலை வீசத்தொடங்கிய நிலையில் நாம் அனைவரும் கவனமுடன் செயல்படவேண்டும். தூத்துக்குடியில் மிகக் குறைந்த அளவில் கரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 50 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது மூலமாக 90 சதவீதம் நோய் பரவலை தடுக்கலாம். மேலும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் பருக வேண்டும்.

அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிப்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.