ETV Bharat / state

தூத்துக்குடி- மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்: பாரம்பரிய தோணி தொழில் பாதிக்கும் அபாயம்!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கிடையே தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தினால் தோணி தொழிலாளர்களின் வாழ்வு அடியோடு முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தோணி தொழிலை நம்பியுள்ள 6,000 குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு தோணியினை புதிதாக கட்ட வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் முதலீடு செய்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும்.

தோணி தொழில் பாதிக்கும் அபாயம்
தோணி தொழில் பாதிக்கும் அபாயம்
author img

By

Published : Oct 19, 2020, 4:48 PM IST

தமிழ்நாட்டின் பெருமைகளை உணர்த்திடும் மரபுசார் தொழில்கள் ஏராளம் உண்டு. பண்டைய கால தமிழ் இன மக்கள் நீர், நிலம் என இரு வழிகளிலும் கடல்தாண்டி வாணிபம் செய்து நம் பெருமைகளை அண்டை நாட்டினரிடையே நிலைநாட்டி வந்தனர். தமிழ்நாட்டிலிருந்து ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கும் வணிக முறையில் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக இன்றைக்கும் பல சரித்திர கூறுகள் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நவீன யுக வளர்ச்சியில் நம் மரபு சார்ந்த தொழில்களையும் விஷயங்களையும் மெல்ல மெல்ல இழந்து வருவதை உணர முடிகிறது. வளர்ந்த நிலையை அடைய வல்லரசு நாடுகளுக்கு இணையாக நேரம், வேகம் இரண்டிலும் காலத்திற்கேற்ற மாற்றம் நமக்கு தேவை என்றாலும் தொன்மை பொருந்திய நமது பாரம்பரியம், மரபுவழி விஷயங்களை கைவிடா வண்ணம் திட்டங்களும், செயல்களும் வகுக்கப்பட வேண்டும் என்பதே திண்ணம்.
அன்றைய காலத்தில், கடவுச்சீட்டு இல்லாமலே கடல் தாண்டி தமிழர்கள் தடம் பதிக்க வாணிபம் துணை நின்றது. பொருள் கொடுத்து பொருளீட்டும் வணிகத்துக்கு கடல் வழியே உற்ற வழி என உணர்ந்தவர்கள் தோணிகளில் பொருள் கடத்தி நட்பு பாராட்டி வந்தார்கள். ஆதி தொட்டே தோணி தொழிலை தொன்மையாய் செய்த தமிழர்கள் இன்றளவும் அதை கடைபிடித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டிலிருந்து மாலத்தீவுக்கு தோணிகளில் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ஆனால் இதை உடைத்தெறியும் வண்ணமாக மத்திய அரசு புதுத் திட்டமொன்றை கையிலெடுத்துள்ளது. கடந்த 21ஆம் தேதி தமிழ்நாட்டில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து மாலத்தீவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

16 சரக்கு பெட்டகங்களையும், 2000 டன் பொது சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு முதல் சரக்கு கப்பல் மாலத்தீவு நோக்கி புறப்பட்டது. இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கிடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்னர் மாலத்தீவுக்கு தேவையான பொருள்கள் கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலமாகவே மாலத்தீவுக்கு கொண்டு செல்லபட்டுவந்தது. வணிகர்கள், கடல்சார் சரக்கு பெட்டக வாணிப நிறுவனத்தினரின் நீண்டநாள் கோரிக்கையான இந்தியா-மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இது பெரு வணிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து இந்தியா-மாலத்தீவு இடையே கடல்வழி வாணிபத்தின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவின் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, மாலத்தீவு நாட்டின் கப்பல் மற்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஆயிஷாத் நஹீலா ஆகியோர் இணைந்து காணொலி மூலமாக சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசுகையில், "இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து பேருதவியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
மாலத்தீவு நாட்டின் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆயிஷாத் நஹீலா கூறுகையில், "இந்தியா-மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய உறவினை பிரதிபலிக்கும் விதமாக இந்தக் கப்பல் போக்குவரத்து அமைந்துள்ளது" எனக் கூறியிருந்தார்.
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாலத்தீவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படியும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலிக் காட்சி மூலமாக மாலத்தீவு நாட்டின் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தும் விதமாகவும் கடந்த 21ஆம் தேதி இந்தியா- மாலத்தீவுக்கு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தினால் அந்நிய செலாவணியில் பெரும் பங்கு நமது நாட்டுக்கு வருவாயாக மிச்சப்படும். இது தவிர நமது நாட்டிலிருந்து மாலத்தீவுக்கு கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை இனி தேவையின்றி கொழும்புக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து மாலத்தீவுக்கு கொண்டுசெல்வது தவிர்க்கப்படும்.

இதனால் சரக்குகளை கொண்டுசேர்க்கும் பயண நேரம் மிச்சப்படுவதுடன் சரியான நேரத்திற்கு சரக்குகளை கொண்டு சேர்க்கவும் முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு வருவாயும், லாபமும் இரட்டிப்பு மடங்கு கிடைக்கும் வேளையில், தோணி தொழிலாளர்கள் வாழ்வு அடிபிறழ்வது பெரும்பாலான பேருக்கு தெரிவதில்லை. தூத்துக்குடி-மாலத்தீவு இடையே சரக்கு போக்குவரத்தினால் கிடைக்கும் நன்மைகளை அரசுத்தரப்பு விளக்க அறிக்கைகள் தெளிவுப்படுத்தினாலும் பாதகங்களை எடுத்துச் செல்வது நடுநிலையாளர்களின் கடமைகளில் ஒன்று.

அவ்வாறே மாலத்தீவுக்கான சரக்கு போக்குவரத்து தொடக்கத்தால் தோணி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது குறித்து தோணி உரிமையாளர்கள் சங்க செயலாளர் லெசிங்டனிடம் கேட்கையில், "இந்தியாவில் தோணித் தொழில் பாரம்பரிய மிக்கது. 1990களில் இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக போக்குவரத்து தோணிகள் மூலமாகவே நடைபெற்றது.

அப்போது இலங்கை நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்டவை தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து தோணிகள் மூலமாகவே எடுத்துச்செல்லப்படும். இலங்கை நாட்டின் வளர்ச்சிக்கு தோணி தொழிலாளர்களும் காரணம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

இதன்பிறகு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை-இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியாக சரக்கு பெட்டக போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதிலிருந்து தோணி தொழிலாளர்களின் வாழ்வு நசிய தொடங்கிவிட்டது. 2000க்கு பிறகு தூத்துக்குடி- இலங்கை இடையே தோணிகள் மூலமாக சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

எனவே தோணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து எடுத்த முடிவின்படி தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு தோனி போக்குவரத்தை தொடங்கினோம். 40 தோணிகள் மாலத்தீவு நாட்டுக்கு சரக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நசிவு காரணமாக படிப்படியாக தோணிகள் போக்குவரத்து குறைய தொடங்கியது.

தற்போது வெறும் 15 தோணிகளே தூத்துக்குடி-மாலத்தீவு இடையே சரக்கு பரிமாற்றம் செய்து வருகின்றன. ஆனால் இதற்கும் தடை ஏற்படும் விதமாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தூத்துக்குடி - மாலத்தீவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தை கடந்த 21ஆம் தேதி தொடங்கி உள்ளது. தூத்துக்குடியில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பலானது கொச்சி துறைமுகத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து மாலத்தீவின் மாலி துறைமுகத்துக்கு செல்கிறது.
மத்திய அரசின் இந்த கப்பல் போக்குவரத்தினால் தோணி தொழிலாளர்களின் வாழ்வு அடியோடு முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தோனி தொழிலை நம்பியுள்ள 6000 குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு தோணியினை புதிதாக கட்ட வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் முதலீடு செய்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும்.
எனவே, மாலத்தீவுக்கு தொடங்கப்பட்டுள்ள நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தால் ஏற்கனவே இருக்கின்ற தோணி தொழிலாளர்களும், புதிதாக தொழிலுக்கு வர எண்ணுபவர்களும் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தோணி தொழிலாளர்கள் மட்டுமல்ல, மரம் அறுப்பவர், தச்சு வேலை செய்பவர், பெயிண்டர், மெக்கானிக், படகோட்டி, மாலுமிகள், வேலையாட்கள் என பலதரப்பட்ட தொழிலாளர்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

தோணி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரும் பெரு நிறுவன முதலாளிகள் அல்ல. சிறு, குறு வணிகர்கள் தான் தோணிகள் மூலமாக அண்டை நாட்டுக்கு தங்களது சரக்குகளை அனுப்பி வருகின்றனர். எனவே இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம் சிறு, குறு வணிகர்களையும் பாதிப்படையச் செய்யும். எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொச்சி, கர்நாடகா துறைமுகங்களில் இருந்து மாலத்தீவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். மேலும் சரக்குகளை பெட்டகங்களாக மாலத்தீவுக்கு ஏற்றிச் செல்வதற்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம், தோணிகளில் எடுத்துச்செல்லும் கட்டணத்திற்கும் குறைவாக இருக்கக் கூடாது.
மீனவர்களையும், மீன் தொழிலையும் பாதுகாக்கும் வகையில் நலத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பல சட்ட வரைவுகளை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த திட்டங்கள் தோணி தொழிலாளர்களும் பொருந்தும் வகையில் மாற்றிட வழி செய்ய வேண்டும். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் தோணிகள் பராமரிப்பு தளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தினாலே மூன்று தோணிகள் கடலில் மூழ்கி கிடக்கின்றன. ஆகவே எஞ்சியுள்ள தோணிகளையாவது பாதுகாக்கும் பொருட்டு வ.உ.சிதம்பரனார் துறைமுக அலுவலர்கள் பழைய துறைமுகத்தில் தோணிகள் பராமரிப்பு இடத்தை புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை எடுக்கச் செல்வதற்கு குறிப்பிட்ட சரக்குகளை தோணிகள் மூலமாகவே மாலத்தீவுக்கு கொண்டு செல்வதற்கு திட்டம் வரையறுக்க வேண்டும். அப்பொழுதுதான் தோனி தொழிலாளர்கள் வாழ்வு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு வழி செய்ய முடியும்" என்றார்.

இதையும் படிங்க: வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.