கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முதல்நிலை பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களை பாராட்டும் வகையில், விமானப் படையின் ஹெலிகாப்டர்களைக் கொண்டு நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி முப்படை மரியாதை செய்யப்பட்டது.
அந்தவகையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, கடற்படை ராணுவத்தினர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
![கடற்படை ரோந்துக் கப்பலில் வண்ண விளக்குகள் எரியவிட்டு மருத்துவர்களை கௌரவித்த கடலோர காவல் படையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-04-coast-guard-honor-medical-service-vis-script-7204870_03052020213325_0305f_1588521805_288.jpg)
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சி. ஜி. அபிராஜ், சி. ஜி. ஆதேஷ் ஆகிய இரண்டு அதிநவீன ரோந்துக் கப்பல்கள், வ. உ. சிதம்பரனார் துறைமுகம் அருகே நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இந்த கப்பல்களில் சிறப்பு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி எரியவிடப்பட்டன.
![கடற்படை ரோந்துக் கப்பலில் வண்ண விளக்குகள் எரியவிட்டு மருத்துவர்களை கௌரவித்த கடலோர காவல் படையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-04-coast-guard-honor-medical-service-vis-script-7204870_03052020213325_0305f_1588521805_966.jpg)
சுமார் 15 நிமிடங்கள் வரை விளக்குகள் தொடர்ந்து எரிய விடப்பட்டும், கப்பலிலிருந்து வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டும் மருத்துவ பணியாளர்களை கடற்படையினர் கௌரவித்தனர்.
இதையும் படிங்க: மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுக : வலியுறுத்தும் வைகோ!