ETV Bharat / state

தூத்துக்குடியில் இருந்து நிறுத்தப்பட்ட லிங்க் எஸ்பிரஸ்-யை மீண்டும் இயக்க வேண்டும்... தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கோரிக்கை! - இன்றைய தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொழில் நகரமான தூத்துக்குடியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கு தேவையான நீண்ட தூர ரயில்கள் இல்லை என தொழில் வர்த்தக சங்கங்கள், பயணிகள் நலச்சங்கம் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்தான செய்தி தொகுப்பு..!

Chennai and Coimbatore link express cancelled from Thoothukudi passenger request to Southern Railway to run a train
தெற்கு ரயில்வே-க்கு பயணிகள் கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 7:51 PM IST

தெற்கு ரயில்வே-க்கு பயணிகள் கோரிக்கை

தூத்துக்குடி: கரோனா காலத்திற்கு முன்பு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி-கோயம்புத்தூர் லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. அதன்பின் 2014-ஆம் ஆண்டு சென்னை-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இந்த ரயில்களை தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கிடைக்கப் பெற்ற ரயில்களாகும். இந்த ரயில்களை பொதுமக்கள் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும், சென்னைக்கும் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

கரோனா காலத்திற்கு பின்பு லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்த ரத்து செய்த ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதில்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. காரணம் என்னவென்றால் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் கோச்சிகளை கழட்டி மாட்ட முடியாது என்று தெற்கு ரயில்வே கூறுயது.

இருந்தும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி - கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது. அதேபோல் திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே மத்திய ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் இன்று வரை தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இரவு நேர விரைவு ரயில், மற்றும் பாலருவி விரைவு ரயில் ரயில்வே வாரியத்திடம் அனுமதி கிடைத்தும் இயக்காமல் தெற்கு ரயில்வே அதை கிடப்பில் போட்டுள்ளது.

இதேபோல் மும்பை - தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் மே கடைசி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை இயக்கியது. அதனை முழுமையாக இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் ரயில் எப்போதும் அதிக காத்திருப்போர் பட்டியலில் காணப்படுகிறது. இந்த ரயிலில் தூத்துக்குடியில் இருந்து RAC பயணிப்பவர்கள் RAC-ஆகத்தான் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் சென்னை எழும்பூரில் இறங்குகிறார்கள். கரோனா காலத்திற்கு முன்பு தூத்துக்குடி - சென்னை பகல் நேர ரயிலில் முத்துநகர் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் இந்த பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி வந்தார்கள்.

இப்போது முத்துநகர் ரயில் மூலம் மட்டும்தான் சென்னைக்கு தூத்துக்குடியில் இருந்து செல்ல முடிகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு பகல் நேர நேரடி விரைவு ரயிலை இயக்க வலியுறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி செல்பவர்கள் மிகுந்த பயனடைவார்கள்.

ஆதலால் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக தூத்துக்குடி - சென்னை பகல் நேர ரயில் இயக்க பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல் ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்ற ரயில்களான திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடனடியாக இயக்க வேண்டும். தூத்துக்குடி - சென்னை பகல் நேர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி - மும்பை வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும். அதுவரை மும்பை - தூத்துக்குடி ரயிலை சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து ரயில் பயணியான ஆனந்தன் கூறுகையில், “தூத்துக்குடியில் இருந்து காலை வேளையில் சென்னைக்கு ரயில் இயக்கப்பட்டது, அதை நிறுத்திவிட்டனர். மதுரை, திருச்சி வழியாக சென்னை செல்லும் இந்த ரயிலால் விரைவாக பயணம் செய்தோம். விமான டிக்கெட் கூடுதலாகி விட்டதனால் காலை, இரவு நேர ரயிலை ரயில்வே நிர்வாகம் கொண்டு வர வேண்டும். மேலும், பாலருவி ரயிலையும் உடனடியாக இயக்கம் வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பயணிகள் நல ஆலோசனை குழு உறுப்பினர் பிரம்மநாயகம் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயிலும், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு இரவு நேர ரயிலும் கரோனா காலகட்டத்திற்கு முன் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது இரண்டு ரயில்களையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

அதற்கு மாற்றாக தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் ரயில் விடுவோம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம், மத்திய ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், மத்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

காரணம் முன்பை விட தூத்துக்குடியில் பயணிகள் கூட்டம் அதிகமாயிற்று. ஆனால் ரயில்வே நிர்வாகம் கண்டுக்கவில்லை. அது போக, மும்பைக்கு ரயிலானது மே கடைசியில் இருந்து செப்டம்பர் முதல் வாரம் வரை இயக்கினர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகவே, தொடர்ச்சியாக ரயிலை இயக்க வேண்டும். இதற்காக திருநெல்வேலிக்கு சென்று ரயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வர வேண்டும்.

ஆகவே, தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில், காலை வேளை இயங்கும் சென்னை ரயில், தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில், மும்பை ரயில் ஆகிய ரயில்களை பயணிகள் நலன் கருதி உடனடியாக தெற்கு ரயில்வே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், மதுரை கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மது-விடம் தொலைபேசி வாயிலாக கேட்ட போது அவர் கூறுகையில், “தூத்துக்குடியில் இருந்து காலை சென்னை செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு கோயம்புத்தூர் செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலும் கரோனாவிற்கு பின் நிறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது பயணிகள் கோரிக்கையின் படி, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், பாலக்காடு ரயிலானது ஒரு சில நிர்வாக குறைபாடுகளால் இயக்க முடியாமல் உள்ளது. அதனையும் சீர் செய்து உடனடியாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லையா? பயணிகள் கூறுவது என்ன?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.