தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டியில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு காரை, பறக்கும் படை அலுவலர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார். இதனிடையே, அமைச்சர் சோதனைக்கு ஒத்துழைப்பு தராமல் அலுவலரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அலுவலர், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது அரசு அலுவலர் பணிக்கு ஒத்துழைப்பு வழங்காதது, அரசு அலுவலரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டது என இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ காரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அதிமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு பம்பர் பரிசு' - அமைச்சர் எம்.சி. சம்பத் பெருமிதம்