ETV Bharat / state

பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்; திமுக நிர்வாகிகள் மீது வழக்கு!

தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா வீடு தாக்குதல்: திமுக உறுப்பினர்கள் மீது வழக்கு!

author img

By

Published : Dec 23, 2022, 10:52 AM IST

தூத்துக்குடி: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8வது தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (டிச.22) காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் நடைபெறும் கூட்டத்திற்குக் கலந்து கொள்ள சசிகலா புஷ்பா சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து பாஜக பிரச்சார பிரிவு தெற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “சசிகலா புஷ்பாவின் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில், டுவிபுரம் மாநகராட்சி 30வது வார்டு திமுக பெண் மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி, அவரது கணவர் ரவீந்திரன், லெவஞ்சிபுரத்தைச் சார்ந்த 45வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மற்றொரு 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா உள்ளிட்ட 9 பெண்கள் 2 ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அவர்கள் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்தியதுடன், அவரது காரின் கண்ணாடியையும் உடைத்தனர். மேற்படி பொருட்களின் சேத மதிப்பு சுமார் 2.5 லட்சம் ரூபாய் இருக்கும். எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு

இதன் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார். முன்னதாக பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய சசிகலா புஷ்பா, ‘அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம்’ என்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். ஏறிப்பாருங்கள், நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, பேசிய நாக்கு இருக்காது” என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சசிகலா புஷ்பா வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.