தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (46). அதிமுக கிளைச் செயலாளரான இவர் மீது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆரோக்கியராஜிடம் அமமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆரோக்கியராஜை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆரோக்கியராஜ் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆரோக்கியராஜ் மனைவி சுந்தரி (42) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அமமுகவைச் சேர்ந்த வேலு, கோமதி சங்கர், துரை, கணேசன், காசி ஆகிய ஐந்து பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - கலவரம் - குற்றப்பத்திரிகையில் உள்ள 71 பேர் யார் யார்?