ETV Bharat / state

நீட் மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ரத்து - திமுகவின் முடிவு என்ன? - Thoothukudi District News

தூத்துக்குடி: மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காதது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி
author img

By

Published : Nov 24, 2019, 4:24 PM IST

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் கஞ்சிபுரம் கற்பக விநாயகா பல்மருத்துவக் கல்லூரி, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை அப்போலோ மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் கல்லூரியில் இன்று 2ஆவது நாளாக நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பார்வையிட்டு முகாமில் கலந்துகொண்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவித்து, ஜனநாயகத்திற்கு பாஜக துரோகம் செய்துள்ளது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றாலும் பாஜக தலைமையில் தான் அமைச்சரவை அமைய வேண்டும் என்ற மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற அநீதி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி பேட்டி

மேலும் இந்திய வங்கிகள் உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘முதலில் நாட்டில் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் சரிவடையாமல் பாதுகாத்தாலே போதும். அதன்பின் வங்கிகளை உலகத்தரத்திற்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தேசிய அளவில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகப்பெரிய அநீதி என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் நிச்சயமாக கேள்வி எழுப்புவேன் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணறு: தமிழ்நாடு அரசு சொன்னதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!

Intro:மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காதது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் - கனிமொழி எம்பி பேட்டி

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி காஞ்சிபுரம், அரவிந்த் கண் மருத்துவமனை நெல்லை, அப்பல்லோ மருத்துவமனை மதுரை ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் கல்லூரியில் இன்று 2-வது நாளாக நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி பார்வையிட்டு முகாமில் கலந்துகொண்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் கண்ணாடி வழங்குதல், கண் பரிசோதனை மற்றும் பல் கட்டுதல், பல் சொத்தை, நீக்குதல் போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான நோய்களுக்கும், மூச்சு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவித்து, பாஜக ஜனநாயகத்திற்கு துரோகம் செய்துள்ளது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடை பெற்றாலும் பாஜக தலைமையில் தான் அமைச்சரவை அமைய வேண்டும் என்ற மனோ நிலையில் மத்திய அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற அநீதி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகள் உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, முதலில் நாட்டில் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் சரிவடையாமல் பாதுகாத்தாலே போதும். அதன்பின் வங்கிகளை உலகத்தரத்திற்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என பதிலளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், தேசிய அளவில் மருத்துவ நீட் பிஜி தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகப்பெரிய அநீதி. இது குறித்து பாராளுமன்றத்தில் திமுக சார்பில் நிச்சயமாக கேள்வி எழுப்பப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.